தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லூர் வட்டத்தில் மலையடிக் குறிச்சி சிற்றூர் உள்ளது. அவ்வூரின் தொன்மை தகவல்கள்;
1.திருமதி மார்க்சிய காந்தி அவர்கள் தொகுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகள் நூலின் முகப்புப் பக்கத்தில் பக்கத்தில் மலையடிக்குறிச்சி கல்வெட்டு இடம்பெற்றுள்ளது - இந்த கல்வெட்டு தான், முற்கால பாண்டியர்களின் கிடைக்கப்பெற்ற முதல் கல்வெட்டு. பாண்டிய மன்னன் சேந்தன் மாறன் ( கிபி 640-670- மாற வர்மன் அரிகேசரி- கூன் பாண்டியன்) ஆணைக்கிணங்க பாண்டிய மங்கல அதியரசன் சேவூர் கிழான் சாத்தனேறன் இக்குடைவரை கோயிலை எடுப்பித்தார் என கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது. இந்த குடைவரை கோயில் மலையடிக் குறிச்சி மலையில் உள்ளது. https://www.tnarch.gov.in/Library%20BOOk%20PDF/Select%20Inscriptions%20of%20Tamilnadu.pdf
2. மலையின் அடிவாரத்தில் நல்ல தண்ணீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை கிபி 1314ஆம் ஆண்டு, மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், தனியாணை திருவெண்காடு உடையானான தமிழதரையன் வெட்டியாக கல்வெட்டு, இக்கிணற்றின் அருகே உள்ளது.
3.கோட்டமலையாறும், மலையடிக்குறிச்சி பெரிய குளமும்:
புளியங்குடி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்ற வாலமலையாறு மற்றும் கோட்டமலையாறு ஆகும்.
கோட்டமலையாற்றிலிருந்து இரண்டு கால்வாய்கள் மலையடிக் குறிச்சி பெரிய குளம் மற்றும் தாருகாபுரம் சிறுகுளத்தை நிரப்பு
கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக