இன்வெர்ட்டர் விபத்தைத் தவிர்க்க வழிகள்: 1.மினரல் வாட்டர் அளவு சரியாக இருக்க வேண்டும். 2.அறை வெப்பநிலை கூடாமல் இருக்க வேண்டும் ( காற்றோட்டம் தேவை). 3.தரமான வயர்களை ( மின் கம்பிகளை ) உபயோகிக்கவும். 4. இன்வெர்ட்டர் தீப்பற்றினால் DCP ( பொடி- தீயணைப்பான்) அல்லது CO2 ( கார்பன் தீயணைப்பானை பயன்படுத்தவும். தண்ணீரை ஊற்றக் கூடாது.
இடுகைகள்
டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தென்காசி மாவட்டம், வாசுதேவ நல்லூர் வட்டத்தில் மலையடிக் குறிச்சி சிற்றூர் உள்ளது. அவ்வூரின் தொன்மை தகவல்கள்; 1.திருமதி மார்க்சிய காந்தி அவர்கள் தொகுத்து, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகள் நூலின் முகப்புப் பக்கத்தில் பக்கத்தில் மலையடிக்குறிச்சி கல்வெட்டு இடம்பெற்றுள்ளது - இந்த கல்வெட்டு தான், முற்கால பாண்டியர்களின் கிடைக்கப்பெற்ற முதல் கல்வெட்டு. பாண்டிய மன்னன் சேந்தன் மாறன் ( கிபி 640-670- மாற வர்மன் அரிகேசரி- கூன் பாண்டியன்) ஆணைக்கிணங்க பாண்டிய மங்கல அதியரசன் சேவூர் கிழான் சாத்தனேறன் இக்குடைவரை கோயிலை எடுப்பித்தார் என கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது. இந்த குடைவரை கோயில் மலையடிக் குறிச்சி மலையில் உள்ளது. https://www.tnarch.gov.in/Library%20BOOk%20PDF/Select%20Inscriptions%20of%20Tamilnadu.pdf 2. மலையின் அடிவாரத்தில் நல்ல தண்ணீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை கிபி 1314ஆம் ஆண்டு, மூன்றாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், தனியாணை திருவெண்காடு உடையானான தமிழதரையன் வெட்டியாக கல்வெட்டு, இக்கிணற்றின் அருகே உள்ளது. 3.கோட்டமலையாறும், மலையடிக்குறிச்சி பெரிய ...